மனித இனம் தோன்றியது முதலே கற்பனையிலும், கதைகளிலும் இப்படி ஒன்று இருந்தால் நன்றாக இருக்குமே என சிந்திக்கத் தூண்டிய விஷயம் விண்ணில் பறப்பதாகும். வானில் பறவைகள் பறப்பதை மனிதன் என்று கண்டானோ... அன்றே பறக்கும் ஆசை தோன்றிவிட்டது.
பல நூற்றாண்டுக் கனவை நிறைவேற்ற அமெரிக்காவில் பிறந்தனர், 'ரைட் பிரதர்ஸ்’ என்று அறியப்படும் ஆர்வில் ரைட் மற்றும் வில்பர் ரைட். சிறுவர்களாக இருந்தபோது, ஒரு முறை இவர்களின் அப்பா சீன பொம்மை ஒன்றை வாங்கி வந்தார். அதில் தலைப் பகுதியில் மூன்று விசிறிகள் இருக்கும். அதனுடன் இணைக்கப்பட்டு இருந்த ரப்பர் பட்டையை இழுத்து விட்டால், அது உயரே பறக்கும். விசிறியின் வேகம் குறைந்த உடன் கீழே வரும். கொஞ்ச நாட்களில் அது பழுதாகிவிட்டது. உடனே இவர்களே புதிதாக ஒன்றை வடிவமைத்து விளையாடினார்கள்.
ரைட் சகோதரர்கள் முறைப்படி உயர்கல்வி கற்கவில்லை. 1892-ல் சைக்கிள் விற்பனை நிலையத்தைத் தொடங்கினர். 1896-ல் மிகவும் பாதுகாப்பான சைக்கிள்களை உற்பத்தியும் செய்தனர். ஆனாலும், அவர்கள் சிந்தனை முழுவதும் பறக்கும் இயந்திரத்தை வடிவமைப் பதிலேயே இருந்தது.
அந்த நாட்களில்... பல்வேறு ஆராய்ச்சியாளர்கள் சிறிய கிளைடர் விமானங்களைப் போல உருவாக்கிப் பறந்து, அதில் பல்வேறு ஆராய்ச்சி களைச் செய்துவந்தனர். அந்த முயற்சிகளில் ஏற்பட்ட விபத்தில்... சிலர் இறந்தனர். அனைத்துக்கும் மேலாக ஜெர்மனியின் 'ஆட்டோ லிலியந்தால்’ என்பவர், தனது இரண்டு கைகளிலும் றெக்கை போன்ற அமைப்பைக் கட்டிக் கொண்டு, அதில் சிறிய இயந்திரங்களைப் பொருத்தி, உயரமான இடங்களில் இருந்து குதித்து, பலமுறை வானில் பறந்தார். ஓவ்வொரு முறையும் இயந்திரத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக மேம்படுத்தினார். ஆனாலும், அவரது பயணங்கள் ஆபத்து நிறைந்ததாகவே இருந்தன. அப்படி ஒரு முறை பறந்தபோது, உயரத்தைச் சரியாகக் கணிக்காததால் நேர்ந்த விபத்தில் லிலியந்தால் இறந்தார்.
ரைட் சகோதரர்கள் இதற்கு எல்லாம் அசர வில்லை. பறவைகள் பறக்கும்போது அதன் உடல் அமைப்பு, வால் மற்றும் றெக்கைகள் எப்படி செயல்படுகின்றன என்றும், காற்றின் போக்கு... பறவைகள் தடங்கல் இன்றிப் பறக்க எப்படி உதவுகிறது என்றும் ஆராய்ந்தனர். 1900-ஆம் ஆண்டு, பெட்டி வடிவிலான ஒரு விமானத்தைச் செய்து முடித்தார்கள். 'கிட்டி ஹாக்’ என்ற கடற்கரைப் பகுதியில் இவர்களது முதல் வான் பயணம் நிகழ்ந்தது.
பயணத்துக்கு முன் ஏற்பட்ட பெரும் மணல் புயலில், விமானம் பதினைந்து அடி ஆழத்தில் புதையுண்டுவிட்டது. அதைத் தோண்டி எடுத்துப் பறக்க விடுவதற்கான ஆயத்தத்தைச் செய்தனர். காற்றின் வாட்டத்திலேயே விமானம் பறக்க விடப்பட்டது. அதன் சுக்கான் முனையை இரும்புச் சங்கிலியில் பிணைத்திருந்தனர். தரையில் இருந்தபடியே விமானத்தை அவர்களால் சங்கிலியின் மூலம் கட்டுப்படுத்தி மேலே ஏற்றவும் கீழே இறக்கவும் முடிந்தது. அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
நீண்ட பெட்டி வடிவில் இருந்த அந்த விமானத்தின் மையத்தில், ரைட் சகோதரர்களில் ஒருவர் கம்பி களைக் கெட்டியாகப் பிடித்து படுத்துக்கொள்ள, மற்றவர் நண்பரின் உதவியுடன் விமானத்தின் இரண்டு றெக்கைகளைப் பிடித்து இழுத்தபடி ஓடுவார்கள். றெக்கைகளின் இடையில் காற்று சென்று, விமானத்தை உயரே தூக்கிப் பறக்க வைக்கும். இப்படி மேலே எழும்பிய விமானம், சற்று தூரம் பறந்த பின், மணலில் மெத்தென்று கீழே இறங்கும். இப்படி பல முறை பறந்தார்கள். காற்றின் போக்கு குறைந்ததும் ஊருக்குத் திரும்பினார்கள்.
அடுத்த ஆண்டு, இன்னும் சிறப்பான இயந்திரத்துடன் மீண்டும் 'கிட்டி ஹாக்’ வந்தார்கள். இந்த முறையும் அவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. ஆனாலும், வானில் தொடர்ந்து அதிக நேரம் பறந்தவர்கள் என்ற சாதனையை எட்டினர். ஒவ்வொரு முறை பறக்கும்போதும் சோதனைகள்! இன்னும் பல வருடங்கள் ஆராய்ச்சி செய்தால் மட்டுமே சாதிக்க முடியும் என்றே ஊருக்குத் திரும்பினார்கள்.
சைக்கிள் தொழிலில் மீண்டும் ஆர்வத்து டன் ஈடுபட்டார்கள். வில்பர், இதுவரை தாங்கள் கண்டுபிடித்தவற்றைக் குறிப்புகளாக எழுதினார். அவற்றில் இருந்து 'பெர்னோலி’யின் விதியின்படி காற்றானது விமானத்தை எப்படி பறக்க வைக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. விமானத்தில் மேலும் செய்ய வேண்டிய சில மாறுதல்களும் புரிந்தது.
இறுதியில், டிசம்பர்-14 1903-ல் மீண்டும் கிட்டி ஹாக் நோக்கிக் கிளம்பினார்கள். விமானம் பறக்கத் தயாரானது. யார் பறப்பது என்று பூவா தலையா போட்டதில் வில்பர் ஜெயித்தார். தண்ட வாளத்தின் மீது நிறுத்தி இருந்த விமானத்தை ஆர்வில் இழுத்துக் கொண்டு ஓடினார். விமானத்தின் இயந்திரங்கள் இயங்கத் தொடங்கின. மூன்று நொடிகளே பறந்த விமானம்... தரையில் மோதி விழுந்தது. எனினும் வெற்றியை நெருங்கிவிட்டதை உணர்ந்தனர்.
விமானத்தைச் சரி செய்து, டிசம்பர் 17-ல் மீண்டும் பறக்கச் செய்தார்கள். அவர்களே எதிர்பார்க்காத வகையில் எண்ணூறு அடிகளுக் கும் அதிகமான தூரம் விமானம் பறந்தது. ரைட் சகோதரர்கள் வானத்தை வெற்றிகொண்ட சம்பவம் சரித்திரத்தில் பதிவானது.
எத்தனை முறை தோல்வி அடைந்தாலும், ஒவ்வொரு முறையும் அதில் இருந்து பாடம் கற்று, வான்வெளியை வெற்றி கொண்ட சகோதரர் களின் விடாமுயற்சி
0 comments:
Post a Comment